Featured Slider

Friday, March 23, 2012

புதுமையான இணைய சேவை பேஸ்புக் படங்கள் உங்கள் குரலில் பேசினால்










பேசும் புகைப்படங்கள்,பேசும் விடியோக்கள்,பேசும் குறும்பதிவுகள் என இணையத்தில் எல்லாமே பேசினால் எப்படி இருக்கும்?புதிய இணைய சேவையான கிவிப்ஸ் இதை தான் சாத்தியமாக்குகிறது.
பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படமோ டிவிட்டரில் வெளியிடப்படும் தகவலோ இனி உங்கள் குரல் அறிமுகத்தோடு நண்பர்களை சென்றடையும்.உபயம் கிவிப்ஸ்.
இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் எந்த விஷயத்துடனும் ஒலி குறிப்புகளை,அதிலும் உங்கள் குரல் பதிவை இணைத்து அனுப்ப கிவிப்ஸ் வழி செய்கிறது.அதாவது புகைப்படம் அல்லது குறும்பதிவு போன்றவற்றோடு 30 நிமிட ஒலி பதிவை இணைத்து கொள்ளும் சேவையை கிவிப்ஸ் வழங்குகிறது.
சமூக ஒலியை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் கிவிப்ஸ் ‘கிளிக் செய்யுங்கள் பேசுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று இணைய உரையாடலுக்கு புதிய பரிமானத்தை ஏற்படுத்தி தருகிறது

No comments:

Post a Comment